• Apr 17 2026

பிக்பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னரை அதிரடியாக காட்டிக் கொடுத்த கூகிள்..! இதை யாருமே எதிர்பார்கலையே...

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பல்வேறு சர்ச்சைகள், பல சண்டைகள் என்பவற்றைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் கொடுக்கப்படும் டாஸ்குகளும் வித்தியாசமானவையாகவே இருக்கின்றன.

அதிலும் இதற்கு முன்பு நடந்த எல்லா சீசன்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் இவர்தான் டைட்டில் வின்னர் என்று மக்களால் கணிக்க முடிந்தது. ஆனால் இந்த சீசனில் மட்டும்தான் 80 நாட்களை கடந்தும் யார் டைட்டில் வின்னர் என்று பார்வையாளர்களால் கணிக்க முடியவில்லை.ஒரு வாரம் நன்றாக விளையாடி மக்களின் சமூக ஆதரவை பெறுபவர்கள் அடுத்த வாரம் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். 


விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் இவர்கள் மூவருக்குள்ளும் தான் கடுமையான போட்டி இருக்கும் என்று சொன்னாலும்,இவர்களும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு இதனால் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பது பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

அதேபோல, மாயாவும், பூர்ணிமாவும் மக்களுக்கு என்டேர்டைன்மெண்ட் பண்ணும் வகையில், எதோ தம்மால் முடிந்தவற்றை செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் யாரென கூகுள் தேடலில் சிக்கியுள்ளதாக, தகவல் ஒன்று வைரலாகி உள்ளது.

அதன்படி, அதில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என தேட,  அதற்கு பூர்ணிமா என பதிலளித்துள்ளது. தற்போது குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement