• Jan 19 2025

பிரதீப்பிடம் போனில் மன்னிப்பும் கேட்ட விக்ரம்! வைரலாகும் பரபரப்பு வாக்குமூலம்..?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 இல் தற்போது11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட  விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் ஆகிய மூன்று பேரில், சரவண விக்ரம் வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய விக்ரமும் நேரே தனது வீட்டிற்கு சென்று தன் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டார்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப்புக்கு போன் செய்து, மன்னிப்பு கேட்டுள்ளாராம் விக்ரம்.

அதன்படி வெளியே வந்து வீடியோ வெளியிட்ட விக்ரம், பிக் பாஸ் வீட்டில் யார் மனசையும் நோக அடிக்கக் கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து வார்த்தைகளை பேசினேன். ஆனால் நான் வெளியே வந்த பிறகுதான் பிரதீப் ஆன்டனிக்கு என்ன நடந்தது என்பதே தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்

பெண்கள் எல்லோரும் சொல்றாங்க என்பதற்காகத் தான் பிரதீப்பை பற்றி அந்த நேரத்தில் அப்படி சொல்ல வேண்டியதா போச்சு, மற்றபடி அவர்கிட்ட எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் பிரதீப்பிடம் போன் செய்து பேசி மன்னிப்பும் கேட்டுவிட்டேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement