• Aug 28 2025

கருப்பு சட்டையில் கியூட் லுக்… பிக்பாஸ் ஜனனியின் ஹாட் & ஸ்டைலிஷ் போட்டோஷூட்...!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர் நடிகை ஜனனி. அவரது அமைதியான நடத்தை, உணர்வுப்பூர்வமான பங்கேற்பு ஆகியவை பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. நிகழ்ச்சிக்குப் பிறகு, திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய ஜனனி, விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் சிறிய, ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த நடிப்பின் பின், தற்போது ஜனனி முதன்முதலாக கதாநாயகியாக நடித்துள்ள படம் தான் ‘உசுரே’. காதலும், வாழ்க்கையின் உணர்ச்சிகளும் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான படமாக உருவான ‘உசுரே’, ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


படம் வெளியானதை தொடர்ந்து, ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கருப்பு நிற உடையில் ஸ்டைலிஷ் அவதாரத்தில் தோன்றியுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



Advertisement

Advertisement