• Aug 08 2025

பாவாடை தாவணியில்..!2K கிட்ஸ்களை கிறங்கவைத்த பிக்பாஸ் ஜனனி..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக பேசப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சி மூலமாக  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஜனனி. இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகின்றார்.  தனது சமூக வலைத்தளபக்கங்களில் போட்டோ  ஷுட்கள்  மற்றும் வீடியோக்கள் செய்து பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்.  இவர் தற்போது வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார் .


தளபதி விஜய் நடிப்பில் வெளியான  "லியோ"  படத்தில் நடித்திருந்த இவர். ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.  தற்போது பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பாடகர் வாகீசனுடன் ஹீரோயினாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . 


இந்த நிலையில் ஜனனி தனது இன்ஸடா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார் . அந்த வீடியோவில் ஜனனி பாவாடை தாவணியில் ஒரு பாடலிற்கு வீடியோ  செய்து  பதிவிட்டுள்ளார். தற்போது வைரலாகி வரும் "முத்தமழை இங்கு கொட்டி தீராதோ" என்ற பாடலிற்கு வீடியோ செய்து பதிவிட்டுள்ளார்.  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன்  ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 





Advertisement

Advertisement