• May 31 2026

பிக்பாஸ் புகழ் பார்வதிக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய் சேதுபதி படத்தில் இப்படியொரு கேரக்டரா.?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் கேரக்டர் மற்றும் வேறு பல வகை பாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வருகின்றார் விஜய் சேதுபதி. இவருடைய படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் கதைக்களங்களாகவே காணப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து, "ஆண்டவன் கட்டளை" மற்றும் "கடைசி விவசாயி" படங்களுக்கு பிறகு, விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ் "முத்து என்கிற காட்டான்" வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்" மூலம் இதை தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் வி.ஜே. பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இத்தொடர் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்து கொண்ட வி.ஜே. பார்வதி, இத்தொடரில் "லலிதா" என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாக போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வி.ஜே. பார்வதி சமூக வலைத்தளங்களில் பிரபலமாக காணப்படுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில், அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது பலவித எதிர்பார்ப்புகளை ரசிகர்களுக்கு  ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement