சென்னை ஐபிஎல் திருவிழாவை சிறப்பாக தொடங்கும் விதமாக, Chennai Super Kings அணியின் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ‘Roar 26’ விழா ரசிகர்களை உற்சாகக் கடலில் மூழ்கடித்தது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் பிரபலங்கள் கலந்து கொண்டு, ஐபிஎல் சீசனுக்கான கொண்டாட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்கினர்.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், இசை உலகின் பெருமை A. R. ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தனர். இசை, நடனம், ரசிகர்களின் ஆரவாரம் ஆகியவை ஒன்றாக கலந்த இந்த நிகழ்ச்சி, ஒரு உண்மையான திருவிழா போல் காட்சியளித்தது. குறிப்பாக சேப்பாக்கம் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் மின்னிய ரசிகர்கள், சிஎஸ்கே அணிக்கான ஆதரவை முழுமையாக வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக அமைந்தது, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் MS தோனி இடையேயான உரையாடல். மேடையில் தோன்றிய சிவகார்த்திகேயன், தோனியிடம் “நீங்கள் 60 வயது வரை ஓய்வு பெறாமல் விளையாடலாமே?” என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
அதற்கு பதிலளித்த தோனி, “வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் தகுதி குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அதற்குள் நான் என்னால் முடிந்தவரை தொடர்ந்து விளையாட முயற்சி செய்து வருகிறேன்.” என்று கூறினார். இந்த பதில், ஒரு வீரராக அவர் எதிர்கொள்ளும் சவால்களையும், அதே நேரத்தில் விளையாட்டின் மீது கொண்டுள்ள அவரின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது.
Listen News!