• Jan 19 2025

காதலர் தினத்தை சூப்பராக கொண்டாடிய பிக் பாஸ் பிரபல ஜோடிகள் .... இந்த ஜோடிக்கு கண் பட்டு விடும் போல ....சுத்தி போடுங்கப்பா ..

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான நபர்களாக இருந்து வருபவர்கள் அமீர் பாவனி ஜோடி. இவர்கள் விஜய் டீவியின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் தமக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கின்றார்கள்.


இதில் பாவனி ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த 'பிபி ஜோடிகள் 2' நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார்கள்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தனது காதலை பாவினியிடம் பல விதமாக  பல தடவைகள் சொல்லி இருந்தார் . ஒரு கட்டத்தில் பாவனியும் காதலை ஏற்று கொண்டு அமீரை காதலித்தார் . எல்லோரை போலவும்  இவர்களுடைய  காதலும் பிக் பாஸ் வீட்டிலே முடிவடைந்து விடும் என்று கணக்கு போட்டவர்களுக்கு  முற்று புள்ளி வைக்கும் முகமாக இவர்களுடைய காதல் உண்மையான காதலாகவே இருந்து வருகிறது . 


திருமண வாழ்கைக்கும் ஆயத்தமான இவர்கள் தற்போது இன்றைய காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் . காதலர் தினத்தில் இவர்கள் எடுத்து கொண்ட அழகான ,கியூட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர் .  காதலர் தினமான இன்றைய நாளில் இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன . 


Advertisement

Advertisement