• Jun 11 2026

பலரும் உடைந்து அழுவதற்கு காரணம் பாரதிராஜாவின் அந்த ஒரு குணம் தானா? மனதை நொறுக்கிய அஞ்சலி

Aathira / 8 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல, அவரால் ஊக்கமளிக்கப்பட்ட எண்ணற்ற படைப்பாளிகளுக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது. அவரை பற்றி நினைவுகூர்ந்த இயக்குநர் ராம், தனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலேயே பாரதிராஜா அளித்த நம்பிக்கையை உருக்கமாக பகிர்ந்துகொண்டார்.

அதன்படி அவர் கூறுகையில், நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் அவரை 'சார்' என்று அல்ல, 'அண்ணன்' என்றுதான் அழைப்பேன். நான் எழுதிய முதல் கதையை முழுமையாக அமர்ந்து கேட்டதும் அவர்தான். அந்தக் கதையை கேட்டுவிட்டு அவர் சொன்ன பாராட்டு வார்த்தைகள்தான் எனக்கு முதல் உற்சாகம், முதல் நம்பிக்கை, முதல் அரவணைப்பு என்றார்.

மேலும், அது எனக்கு மட்டும் கிடைத்த அனுபவம் இல்லை. புதிய திறமைகளை ஊக்குவித்து, ஒரு படைப்பை எப்படி மனதார பாராட்ட வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். பலரின் கனவுகளுக்கு அவர் பின்னணியாக இருந்திருக்கிறார் என்றும் கூறினார்.

பாரதிராஜாவின் படைப்புகள் குறித்து பேசிய அவர், அவருடைய படங்கள் சாதி, மத எல்லைகளை தாண்டி மனிதநேயத்தை பேசியவை. ஒரு கலைஞராக மட்டுமல்ல, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதராகவும் அவர் வாழ்ந்தார். எப்போதும் முன்னோக்கிய சிந்தனையோடு இருந்தார். தனது கடைசி நாட்கள் வரையிலும் பழைய சிந்தனைகளில் சிக்கிக்கொள்ளாமல், முற்போக்கான கருத்துகளையே பேசியவர் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதேபோல், தனிப்பட்ட லாபத்திற்காக அவர் ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் சமூகத்தின் சிக்கல்களுக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குரல் கொடுத்தார். இந்த மண்ணோடு ஒன்றிப்போன மனிதர் அவர் என்றார்.

இறுதியாக, மனோஜ் மறைந்தபோதும் அவரை இந்த மண்ணில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர் பாரதிராஜா. அவர் சென்னையில் வாழ்ந்தாலும், மனதளவில் எப்போதும் இந்த மண்ணின் மனிதராகவே இருந்தார். அதனால் தான் அவரது இறுதி பயணமும் இந்த மண்ணிலேயே நிறைவடைவது மிகவும் பொருத்தமான ஒன்று என்று உருக்கமாக நினைவுகூர்ந்தார்.

Advertisement

Advertisement