• Jun 04 2023

அந்த மாதிரி தொழிலில் இறங்கிய 'பாக்கியலட்சுமி' சுசித்ரா.. அப்போ இனி சீரியலில் நடிக்க மாட்டீங்களா.? கேள்வி கேட்கும் ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவ்வாறான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'பாக்கியலட்சுமி'. 


இந்த சீரியலில் குடும்பத்தை கவனிக்கும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி கதை அழகாக பேசுகிறது, கதையோடு பலரின் வாழ்க்கையும் ஒத்துப்போவதால் இந்த சீரியலுக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது எனலாம். மேலும் இப்போது தான் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு அதிகரித்து வருகின்றது எனலாம்.


அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா ஷெட்டி. இவர் கன்னடத்திலும் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது கன்னட சினிமாவில் 15-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


இவ்வாறு சீரியல், திரைப்படங்கள், மற்றும் விளம்பரப் படங்கள் என பலவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் சுசித்ரா தற்போது ஒரு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிரீம் ஒன்றிற்கான விளம்பரத்தில் ஈடுபட்டிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டிருக்கின்றார். 


இதனைப் பார்த்த ரசிகர்கள் சீரியலை விட்டு இப்போ இந்த விளம்பரம் பண்ணும் தொழிலில் இறங்கி விட்டீர்களா எனக் கிண்டலாக கமெண்டுகளின் வாயிலாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement