• May 19 2024

தி.நகர் கொண்டுசெல்லப்படும் பவதாரிணியின் உடல்! ஓடோடி வந்த திரை பிரபலங்கள்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் காலமான பவதாரிணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த, பல்வேறு பிரபலங்களும் அவர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டு நிற்கின்றார்கள்.

அதன்படி, மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் திநகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


விமான நிலையத்தில் இருந்து தி.நகர் இல்லத்திற்கு பவதாரிணி உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு இரவு 10 மணி வரை பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாம்.

இளையராஜாவின் இல்லத்திற்கு கங்கை அமரன், அவரது மகன் பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, பவதாரிணியின் இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடைபெறும் நிலையில் இளையராஜா தேனிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Advertisement

Advertisement