• Jan 09 2026

தாடி பாலாஜி நெஞ்சில் குடியிருக்கும் தளபதி விஜய்...! பயங்கர வைரலாகும் டாட்டூ வீடியோ...!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தாடி பாலாஜி தளபதி விஜயின் த.வெ.க. கட்சியில் இணைந்த பிறகு பலரும் அரசியல் வாதி காலில் விழுவது சகஜம் தானே என்று பலவாறு பேசி வந்தனர். இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி சமீபத்தில் அவரது நெஞ்சில் விஜயின் உருவத்தைப் பச்சைக் குத்தியுள்ளார். இந்த செயல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இவன் தான் உண்மையான ரசிகன் என்று பார்க்கிறார்கள். அப்படி என்ன நடந்தது பார்ப்போம் வாங்க.


நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்ச்சியை ஆரம்பித்து தற்போது TVK  தலைவராக இருக்கிறார். இந்த கட்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் இருக்கும் நிலையில் நடிகர் தாடி பாலாஜியும் அந்த கட்ச்சியில் இணைந்தார். இப்படி இருக்க தீவிர விஜய் ரசிகனான இவர் கிட்டத்தட்ட 7 மணி நேரம் வலியைத் தாங்கிக்கொண்டு தளபதி விஜயின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். அதற்க்கு கீழே என் நெஞ்சில் குடியிருக்கும் என்றும் பச்சை குத்தியுள்ளார். 


பச்சை குத்தும் போது வலியை தாங்கி கொண்டு இருந்திங்க எப்படி இருக்கு என்று மீடியா நிருபர் கேட்டதுக்கு  "வலியைத் தாண்டி ஒரு சந்தோஷம். என் நண்பர், த.வெ.க.வின் தலைவர் போட்டோவை நெஞ்சில் குத்திய இருக்கேன் என்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் தலைவா என்று விஜயின் டாட்டூவுக்குக் கீழ் எழுதப்பட்டுள்ளது


இந்த டாட்டூவை பார்த்தா விஜய் "எப்படி எங்கே போட்டீங்க'ன்னு கேட்பாரு. அதைத் தாண்டி 'இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கணுமா'ன்னு கேட்பாரு. சும்மா சட்டையில போட்டுக் கழட்டிட்டு வேற சட்டைப் போட்டுக்கறது. சட்டையில அவரோடஉருவத்தை நிறைய பேரு குத்துறாங்க. அதைத் தாண்டி ஒரு யுனிக்கா டிபரன்டா இருக்கணும்னு நினைச்சேன் அதான் பச்சை குத்திக்கொண்டேன் என்று கூறினார். விஜய்க்கு இப்படி இப்படி ஒரு ரசிகனா என்று அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ..


Advertisement

Advertisement