• May 18 2026

நியாயம் ஜெயிக்கும்.!! பல சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்த பாலாஜி.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தொடர்பாக வெளியாகியுள்ள குடும்ப விவகாரம் தற்போது பரவலான விவாதத்தை கிளப்பியுள்ளது. விஜய் திருமணத்தை மீறிய உறவில் உள்ளார் என்றும், அதனால் தங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

விஜய் மற்றும் சங்கீதா பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த நிலையில், திடீரென விவாகரத்து கோரியுள்ளதாக கூறப்படும் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிலர் இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவிக்க, மற்றொரு தரப்பு நடிகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள், ஆதரவு மற்றும் எதிர்ப்பு பதிவுகள் அதிகரித்துள்ளன.


இந்நிலையில், நடிகரும் விஜய்யின் நண்பருமான தாடி பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “எதுவும் மாறட்டும்... உண்மை மட்டும் மாறாது, எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது. இன்று சோதனை என்றாலும் நாளை வெற்றி நிச்சயம், கலங்காதே நண்பா... உன் நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இதை விஜய்க்கு நேரடியாக ஆதரவு தெரிவித்ததாக கருதுகின்றனர்.


Advertisement

Advertisement