• Apr 26 2024

குழந்தையாக மாறிய கமல்ஹாசன்- பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இணைந்த பிரபலங்கள்- கியூட்டான போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனது இளமையான நடிப்பினாலும் அழகினாலும் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பதோடு முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்பொழுதும் கதாநாயகனாகவே நடித்து வருகின்றார்.


அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் வேற லெவலிலும் அள்ளிக் குவித்தது. இதனால் இவருடைய மார்க்கெட் அதிகரிததுள்ளதோடு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்து விட்டது.


இந்த நிலையில் இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்த நிலையில் கமல்ஹாசன் வரும் 7ம் திகதி தனது 67வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அந்த வகையில் கமலின் கார்ஜும் டிசைனரான அமிர்தா என்பவர் தனது குடும்பத்துடன் இணைந்து கமலின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement