• Mar 25 2026

மீனாவுக்கு உணவு ஊட்டிவிட்ட அருமை மாமியார் விஜயா! சிறகடிக்க ஆசை சீரியலில் புது டுவிஸ்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய  சீரியல்களின் வரிசையில் முதலிடத்தில் காணப்படுவது தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதிலும் முத்து, மீனாவை மையமாக வைத்து கதை நகர்வதோடு ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் மாமியார் மருமகள் பிரச்சனை, சீதன பிரச்சனை,  பிள்ளைகளுக்கு இடையிலான பந்தம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.


தற்போது இந்த சீரியலில் விஜயாவின் மொத்த குடும்பமும், பாட்டியின் வீட்டிற்கு சென்று உள்ளார்கள்.

இந்த நிலையில், தற்போது பலியான வீடியோ ஒன்றில் பாட்டி வீட்டில் இருக்கும் விஜயா, தனது பிள்ளைகள் மருமக்களுடன் சந்தோஷமாக உணவை பகிர்ந்து சந்தோசமாக காணப்படுகின்றார்.


அதன்படி, குறித்த வீடியோவில் முத்து, மீனா, மனோஜ், ரோகினி என அனைவருக்கும் தனது கையால் உணவை விட்டு விடுகிறார் விஜயா.

தற்போது குறித்த காணொளி வைரலாகியுள்ளதோடு, இதே போல சிறகடிக்க ஆசை சீரியலில் நடந்தால் என்னும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement