• Apr 21 2026

கருத்து சொன்னதற்கே தாக்குதலா.? சங்கீதாவுக்கு மரியாதை கொடுங்க.. TVK மீது குற்றச்சாட்டு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சியினரும் கட்சித் தலைவர்களும் மும்முரமாக தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் பல இடங்களுக்கு நேரிலே விஜயம் செய்து தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார். அவருடைய கட்சியில் பல நடிகர் நடிகைகள், பிரபலங்களும் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் உள்ள தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள், விஜய்க்கு எதிராக பேசுபவர்களையும் கருத்து தெரிவிப்பவர்களையும் சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்ப்பதோடு நேரடியாகவும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றார். அவருடைய தந்தையும் திமுகவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவிக்கின்றார். ஆனால் அவருடைய மகன் சிபி  சக்கரவர்த்தி விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றார்.

இவ்வாறான நிலையிலேயே நேற்றைய தினம் சத்யராஜின் மகள் திவ்யா பிரச்சாரத்திற்கு சென்ற போது அங்கு விஜயின் கட்சி தொண்டர்கள் அவரை தாக்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் சங்கீதாவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்ட அறிக்கை.., 

அன்புடைய அனைவருக்கும்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைச் செயலாளராக நான் என் கட்சிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறேன். நேற்று மாலை தெருக்களில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, TVK கட்சி உறுப்பினர்கள் சிலர் என்னை நோக்கி செருப்புகளை எறிந்தனர். அந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடையச் செய்தாலும், நான் என் உரையை நிறுத்தவில்லை. எனது பெற்றோர் என்னை துணிச்சலுடன் வளர்த்துள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது. அதற்காக உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடாது. என் சகோதரர் சிபி மற்றும் நான் வெவ்வேறு கருத்தியல் கொண்டவர்களாக இருந்தாலும், எங்களுக்குள் எந்தத் தகராறும் இல்லை; நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். நாங்கள் முன்னேற்றமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரு பெண் தனது கருத்தை வெளிப்படுத்துவதற்காக அவமதிக்கப்படக் கூடாது. பெண்களை மதிக்க வேண்டும் என்பதை TVK தலைவரே தனது கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், நாம் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

மேலும், திருமதி சங்கீதா விஜய் நான் அறிந்த மிகவும் சிறந்த பெண்களில் ஒருவராகும்; அவருக்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.


நன்றி

Advertisement

Advertisement