• Jul 24 2024

ஆர்யாவுக்கு வந்த விபரீத ஆசையால் சந்தானத்துக்கு அடித்த ஜாக்பாட்? இது சரி தேறுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் சந்தானம். இதில் கிடைத்த வரவேற்பின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பிரபல நட்சத்திரங்களுடன் காமெடியானாக கலக்கிய இவர் , ஒரு கட்டத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா, அரை எண் 305ல் கடவுள், இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாமே தொடர்ந்து தோல்வியை தான் தழுவியது. அதன்பின்பு தில்லுக்குதுட்டு படம் ஹிட் அடித்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை டிடி  ரிட்டன்ஸ் என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்கள். இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில், தற்போது டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் ஆர்யா இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனவே டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாவது பாகத்தை ஆர்யா இயக்க முன்வந்த நிலையில், இதன் கதைக்களம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement