• Jul 14 2024

7 ஜி பயங்கர பேய் படமா இருக்கும் போலயே.. அலறவைக்கும் டிரைலர் ரிலீஸ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை தான் சோனியா அகர்வால். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.

இதை தொடர்ந்து செல்வ ராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டதோடு இந்த படமும் ஹிட் அடித்தது.

இதை அடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால், ஒரு கட்டத்தில் சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்கும் வகையில் 7ஜி என்ற படத்தில் நடித்துள்ளார்.


ஹாரூன் இயக்கத்தின் உருவான 7ஜிபடத்தில் சோனியா அகர்வாலுடன் ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது சோனியா அகர்வால் நடித்த 7ஜி படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


 

Advertisement

Advertisement