சந்தானம், கெளதம் வாசுதேவ் ,செல்வராகவன் ,யாஷிகா ,கஸ்த்தூரி போன்ற நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ள dd next level படத்தின் முதலாவது சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. இதற்காக ஆர்யா பாடல் வரிகள் எழுதுவது போன்ற நகைச்சுவை வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் எஸ் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்புகள் விரைவாக நடந்து வருகின்றது.
இந்த நிலையில் குறித்த வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. இருப்பினும் இப் படத்திற்கு பாடலினை ஆர்யா எழுதவில்லை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் இந்த படத்தின் ஒரு பாடலின் வரிகளை பா. விஜய் எழுதியுள்ளதுடன் மற்றைய பாடலினை கெளுத்தி என்பவர் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் முதலாம் பாகத்தினை போன்று இந்த படமும் மிகவும் நகைச்சுவை கலந்த பேய் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!