பிக்போஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர் கடந்த ஆண்டு வெளியாகிய லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் இப் படத்தின் பின்னர் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
லிப்ட் பட இயக்குநர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஒரு சில காட்சிகள் மாத்திரம் படமாக்கப்பட்டு வருகின்றது. மற்றும் இந்த படத்திற்கு தற்போது எந்த ஹீரோயினும் தேதி வழங்காமையினால் படக்குழு குழப்பத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் சூட்டிங் வேலைகள் ஆமைவேகத்தில் நகர்வதாகவும் எந்த நடிகையும் படம் நடிப்பதற்கு சம்மதிக்கவில்லை எனவும் இவ்வாறு போனால் அறிமுக நாயகி ஒருவரை படத்தில் களமிறக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Listen News!