தமிழ் சினிமாவில் வழக்கமான கதைகளைத் தவிர்த்து, சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் ஆர்யா முக்கியமானவர்.
இவர் நடிப்பில் வெளியான நான் கடவுள், மதராசப்பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்புத் திறனை ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் தனித்துவமாக வெளிப்படுத்தின.
அண்மையில் வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்திலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார்.
இதற்கிடையில், ஆர்யாவின் 36-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘அனந்தன் காடு’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்திருந்தது.

இந்தப் படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளதுடன், மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார்.
மேலும், எம்புரான் திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதிய முரளி கோபி, ‘அனந்தன் காடு’ படத்திற்கும் கதையை உருவாக்கியுள்ளார். காந்தாரா திரைப்படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைத்திருப்பதும் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘அனந்தன் காடு’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிரெய்லர் வெளியீடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் என சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.
Achyuth Kumar as Mudaliyar in #Ananthankaadu - June 25th release in theatres 💥
A film by @JiyenKrishna
Written by #MuraliGopy
Produced by @vinod_offl@arya_offl @ministudiosllp @AJANEESHB @aditi1231 @stuntsaravanan @dopyuva @GokulamGopalan #Krishnamoorthy pic.twitter.com/luUrfWm1cv
Listen News!