• Aug 16 2026

சினிமாவை விட்டு ஓடத் தயாரான நிவேதா பெத்துராஜ்... கடைசி நேரத்தில் நிகழ்ந்த டுவிஸ்ட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய சுவாரஸ்யமான கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள நிவேதா, ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் பேசியபோது, “2023-ஆம் ஆண்டுடன் சினிமாவுக்கு முழுமையாக குட்-பை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். வாழ்க்கையில் வேறு ஒரு பாதையை தேர்வு செய்ய மனதளவில் தயாராக இருந்தேன். ஆனால் விதி எனக்காக வேறு திட்டம் வைத்திருந்தது. 

நான் எதிர்பார்க்காத விதமாக, இயக்குநர் நாக் அஸ்வின் என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தார். அவரது அழைப்பின் மூலம், இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் தொடர்புடைய ஒரு முக்கியமான படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.” என்று கூறினார்.

மேலும், “என்னை மீண்டும் திரையுலகிற்குள் கொண்டு வந்ததற்காக நாக் அஸ்வினுக்கு மனமார்ந்த நன்றி. அவர் அந்த வாய்ப்பை வழங்காமல் இருந்திருந்தால், இந்த நேரத்தில் நான் இமயமலையில் இருந்திருப்பேன்.” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

நிவேதா பெத்துராஜின் இந்த வெளிப்படையான மற்றும் கலகலப்பான பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் சினிமாவை விட்டு விலகும் முடிவை மாற்றிய சம்பவம் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement