மிஷ்கின் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற திரைப்பட விழாவில் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்து பேசியமை தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.மேடை நாகரிகம் இல்லாமல் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசிய இவரை ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் இது குறித்து மேடை ஒன்றில் மிஷ்கினை கண்டித்துள்ளார்.இவர் மிகவும் கோபமாக "அன்று மேடையில் உட்க்கார்ந்து இருந்த இயக்குநர்கள் அனைவரும் மிக பெரியவர்கள்;உலக சினிமாவை காபி அடித்து படம் பண்ணி ஜெயிச்ச போலி அறிவாளி மிஷ்கின் " கூறியுள்ளார்.
அதில் அவர் "உலக படங்களை பார்த்திருக்கிறேன்னு சொல்றீங்க, உலகம் முழுக்க இருக்கும் புத்தகங்களை படிச்சிருக்கேன்னு சொல்றீங்க. என்ன அறிவு இருக்கு உங்களுக்கு, குறைந்தபட்சம் நாகரீகம் வேண்டாமா.ஒரு மேடையில் பேசுற பேச்சா இது. எல்லோருக்கும் பெண் குழந்தை இருக்கு. எனக்கும் பெண் குழந்தை இருக்கு ,மேடை நாகரீகம் என்பது முக்கியம். எல்லோரையும் சகட்டு மேனிக்கு வாடா என்கிறார், போடா என்கிறார். தொடர்ந்து பல மேடைகளில் இப்படி தான் பேசி வருகிறார் மிஷ்கின் பாலாவை அவன் இவன் என்கிறார், இளையராஜாவை அவன் என்கிறார். யாருடா நீ? நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? என மிஷ்கினை தாக்கி பேசி இருக்கிறார்.
Listen News!