• Feb 20 2026

அரோரா க்யூட்டா இருக்காங்களே..! மீண்டும் ஒன்றிணைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டார்.

இவரைத் தொடர்ந்து முதல் ரன்னரப்பாக சபரிநாதன், இரண்டாவது இடத்தில் விக்கல்ஸ் விக்ரம், மூன்றாவது இடத்தில் அரோரா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்த சீசனில் 18 லட்சம் ரூபாய் தொகையுடன் கானா வினோத் வெளியேறியது மற்றும் பார்வதி கமருதீனுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்ட விவகாரம் ஆகியவை முக்கிய ஹைலைட்டாக அமைந்தன.

பிக் பாஸ் சீசன் 9 நிறைவடையும் தருணத்தில், மீண்டும் மேடைக்கு அழைக்கப்பட்ட பார்வதி கமருதீனுக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது. மேலும், சக போட்டியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகளும் அதனுடன் முடிவுக்கு வந்தது.


இந்த நிலையில், பிக் பாஸ் முடிந்த பின்பு போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். அதன்படி, பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒன்றாக கோயிலுக்கு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் கனி, அரோரா, திவ்யா, துஷார் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். ஆனால், பார்வதி கமருதீன் அந்த வீடியோவில் இடம்பெறவில்லை என்பதால், ரசிகர்கள் தங்களது ஏக்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இதுவரை சமூக வலைதளங்களில் கவர்ச்சி தோற்றத்தால் பிரபலமான அரோரா, பாரம்பரிய தமிழ் பெண் உடையில் தோன்றிய காட்சியும் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement