• Feb 03 2026

வில்லனா நடிக்கிறதையே நிறுத்திவிட்டேன்... எதற்காகத் தெரியுமா.? அர்ஜுன் ஓபன்டாக்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் ஒரு தனிப்பட்ட இடத்தை பெற்ற நடிகர் அர்ஜுன், தன்னுடைய நடிப்புக் குறித்த ரசிகர்களின் எதிர்வினைகளைத் தற்போது திறந்த மனதுடன் பேசியுள்ளார். அவர் சமீபத்தில் கூறிய கருத்துகள், சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வைரல் ஆகி வருகின்றது.


சமீபத்திய பேட்டியில் நடிகர் அர்ஜுன், “இப்போ நான் வில்லனா நடிக்கிறத நிறுத்திட்டேன்... அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் தான் கடைசி. எனக்காக நான் நிறுத்தல. நிறைய ரசிகர்களுக்கு நான் வில்லனா நடிக்கிறது பிடிக்கல... அதனால இனி வில்லனா பண்ணுறது இல்ல.” என்று கூறியுள்ளார். 

அவர் மேலும், " வில்லனா நடிச்சதுக்கு விருது எல்லாம் அதிகமா கொடுத்து இருக்காங்க தான். ஆனாலும் என் ரசிகர்களுக்கு பிடிக்கல... அதனால இனி வில்லனா பண்ணுறது இல்ல.. " என்று முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார் அர்ஜுன். 


இந்த வார்த்தைகள், அவர் ரசிகர்களின் கருத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றன.

Advertisement

Advertisement