• Jun 26 2024

மகளின் கல்யாண ஏற்பாடுகளுக்குள்ளும் விடாமுயற்சி பற்றி அப்டேட் கொடுத்த அர்ஜுன்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பில் காணப்படும் விடாமுயற்சி படத்தில், நடிகர் அஜித் உடன் அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலர் நடத்து வருகின்றார்கள். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இவ்வாறு கடந்த ஆறு மாத காலங்களாக இந்த படம் முடங்கிய நிலையில், தற்போது எதிர்வரும் 20 ஆம் தேதி இதன் சூட்டிங் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்கும் அர்ஜுன் இந்த படத்தில் இன்னும் 30 சதவீத ஷூட்டிங் மட்டுமே உள்ளது என தகவல் வெளியிட்டு உள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் இந்த ஷூட்டிங்கில் நடிகை திரிஷாவும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு மாத காலம் அசர்பச்சானிலேயே தங்கி இருந்து படத்தில் சூட்டிங் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதேவேளை, அஜித் தனது சொந்த வேலை காரணமாக ஜூலை முதல் வாரத்தின் சில தினங்கள் சென்னைக்கு வர உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement