விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நடிகர் அஸ்வின், ஆபீஸ், ரெட்டைவால் குருவி, ராஜா ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கிறார். அதன் பின்பு ஒரு சில படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இந்த நிலையில், நடிகர் அஸ்வின் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட போது, அவர் ஏற்கனவே கூறிய '40 கதைகளை கேட்டு தூங்கிவிட்டேன்' என்ற பேச்சு ட்ரோலுக்கு உள்ளாகியதை மீண்டும் செய்தியாளர் ஒருவர் ஞாபகப்படுத்தி உள்ளார். இதன்போது நடிகர் அஸ்வின் ஆவேசமாக பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதன்படி குறித்த விழாவில் செய்தியாளர் ஒருவர், இப்போதும் கதைகளை கேட்கும் போது தூங்குகின்றீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அஸ்வின், நான் நேர்மையா ஒரு கேள்வி கேட்டா நீங்க பதில் சொல்வீர்களா? நீங்க 40 கதையை கேட்டால் தூங்க மாட்டீர்களா? தியேட்டரில் போய் பார்த்தால் எல்லோரும் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நான் பொதுவாக தான் 40 கதைகள் என்று சொன்னேன். அது கூடலாம், குறையலாம். நான் ஒன்றும் பெரிய நடிகன் இல்லை. இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகின்றேன். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்கின்றேன். எப்போதோ பேசிய விஷயத்தை வைத்து நீங்கள் என்னை மனதளவில் குத்திக் காட்ட வேண்டும் என்று தான் நினைக்கின்றீர்கள் என்று கூறினார்.
இதைக் கேட்ட செய்தியாளர், நான் உங்களை குத்தி எல்லாம் பார்க்கவில்லை. இப்ப இவ்வளவு போல்டா பேசுறீங்க, நடிக்கிறீங்க ... இப்ப நீங்க முழிச்சுக்கிட்டீங்களா? நடிப்பதற்கான முன்னேற்றம் வந்துவிட்டதா? என்று தான் கேட்டேன் என சொல்லி சமாளித்துள்ளார்.
Listen News!