• Jan 19 2025

ரஞ்சித் மீது இவ்வளவு வன்மமா? கண்ட்ரோல் இல்லாமல் உளறிக் கொட்டிய தர்ஷா குப்தா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!



தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்பவர்தான் ரஞ்சித். இவர் முதன்முதலாக கே.எஸ் ராஜ்குமார் இயக்கிய பொன்விலங்கு படத்தின் மூலம் நடித்தார். அதன் பின்பு மைனர் மாப்பிள்ளை, சிந்து நதி பூ, பாரதி கண்ணம்மா, அவதார புருஷர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்

நடிகர் ரஞ்சித் மறுமலர்ச்சி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அவர் சிறந்த வில்லனுக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார். அதன் பின்பு பல வெற்றி படத்தில் நடித்த இவர், பீஷ்மர் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தார். ஆனாலும் இந்த படம் தோல்வி அடைந்தது.

இதைத் தொடர்ந்து நடிகை பிரியா ராமனுடன் சேர்ந்து நடித்த போது அவர் மீது காதல் கொண்டார். அதன் பின்பு இரு வீட்டர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனினும் ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதன் பின்பு சீரியல் நடிகை ராகசுதாவை திருமணம் செய்தார். ஆனாலும் அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை.

d_i_a

இதை அடுத்து பல ஆண்டுகள் தனிமையில் இருந்த ரஞ்சித் மீண்டும் தனது முதல் மனைவி நடிகை பிரியா ராமனுடன் இணைந்தார். தங்களின் விவாகரத்தை ரத்து செய்வதாக அவர்களுடைய திருமண நாளிலேயே அறிவித்திருந்தார். மேலும்  சமீபத்தில் காதல் திருமணம் பற்றி பேசி மிகவும் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரஞ்சித் பற்றி தர்ஷா குப்தா சில விஷயங்களை பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில்,  நடிகர் ரஞ்சித் சாருடன்  செந்தூரப்பூவே என்ற சீரியலில் சேர்ந்து நடித்திருப்பேன். அப்போது அவருடைய கேரக்டர் மொத்தமாகவே வேற மாதிரி இருக்கும். அவர் இப்போ பிக் பாஸ் வீட்டுக்கு கோபத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு பயங்கரமா நடிச்சிட்டு இருக்காரு. 

நான் அவருடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளேன்.  ஆனால் அவர் இப்படி இல்லவே இல்ல.. வேற மாதிரி தான் இருப்பார். இப்ப பிக் பாஸ் வீட்டுல கோபத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்காரு என்று ரஞ்சித் பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார் தர்ஷா குப்தா.

Advertisement

Advertisement