தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்போது தனக்கேற்ற சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் கதாநாயகனாக உயர்ந்துள்ளார் நடிகர் சூரி. இவர் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.
அதேபோல காமெடி நடிகர் ஆக இருந்து ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் ஆல்பம் படங்களில் நடித்துள்ளார் நடிகர் கொட்டாச்சி.
இவர் சமீபத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நானும் நடிகர் சூரியும் நண்பர்களாக இருந்தோம். ஆனால் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க சூரி எந்த உதவியும் செய்யவில்லை. அவர் இப்போது உயர்ந்த இடத்திற்கு சென்ற பிறகு எங்களை மறந்து விட்டார் என்று தன்னுடைய ஆதங்கத்தை பேசி இருந்தார்.
இந்த நிலையில், நடிகர் கொட்டாச்சி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது சூரியிடம் மன்னிப்பு கேட்டு அது தொடர்பில் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசுகையில்,
“நேத்து நான் நண்பன் சூரிய பற்றி பேசின வீடியோ எல்லாரும் பகிர்ந்து வர்றீங்க. ஆனா நான் எப்பவுமே சூரியோட நண்பன்தான். எங்களுக்குள்ள எந்த விரிசலும் கிடையாது. அவர்மேல எனக்கு எந்த கோபமும் இல்லை.

இன்னைக்கு அவர் உயர்ந்த இடத்துல இருக்கார்னா அதுக்கு காரணம் அவரோட உழைப்பும் திறமையும் தான். சினிமாவுல யாருக்கும் வெற்றி சும்மா கிடைக்காது. உழைப்புக்குத்தான் மரியாதை.
நேத்து நடந்த பிரஸ் மீட்ல, டைரக்டரும் அவரும் ஆரம்ப கால நண்பர்கள் பற்றி பேசிக்கிட்டு இருந்தாங்க. அந்த நேரத்துல பத்திரிகையாளர்கள் கேட்டதுக்குப் பதில் சொல்லும்போது, சமீபத்துல நடந்த விஷயத்தை நான் உணர்ச்சிவசப்பட்டு ஓபனாக சொல்லிட்டேன்.
‘சூரி… தயவு செய்து என்ன மன்னிச்சுக்க நண்பா. நீ எனக்கு எதுவும் செய்யலன்னு குறையா நான் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். அது என்னோட ஆதங்கம் தான். அந்த இடத்துல அப்படி பேசிருக்க கூடாது.
நிறைய குழந்தைகளுக்கு பள்ளி உதவி, பண உதவி எல்லாம் நீ பண்றத கேள்விப்படுறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். சினிமா ரீதியா எனக்கு செய்யலையேன்னு நினைச்சு நான் பேசிட்டேன். அதுக்கு மன்னிச்சுக்க’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
Listen News!