• Apr 15 2026

இந்த ரிக்ஸ் அத்தனையும் ஹார்ட்டிஸ்க் கிடைக்கவா? ரஜினி பொண்ணு வெளியிட்ட இன்ஸ்டா பதிவு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.

சிறப்பாக சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யா, தனுஷ் திருமண வாழ்க்கையில், திடீரென ஏற்பட்ட பூகம்பத்தினால் இருவரும் பிரிந்து வாழ்கின்றார்கள். எனினும் அவர்கள் இதுவரையில் விவாகரத்து பெறவில்லை.

3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான  ஐஸ்வர்யாவுக்கு, அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும், அந்த படம் பலரையும் கவர்ந்திருந்தது. தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயற்றியிருந்தார். எனினும் அது தோல்வி அடைந்தது.


இதைத்தொடர்ந்து ரஜினிகாந்தை கெஸ்ட் ரோலிலும், விஷ்ணு விஷால், விக்ராந்தை லீடு ரோலிலும் வைத்து லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா. அதுவும் படு தோல்வி அடைந்தது. ஆனால் அதற்கு காரணம் அப்பா தான், ஹார்ட்டிஸ்க் தொலைச்சிட்டு என உருட்டி இருந்தார்.


இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் மார்ச் மாதம் பயணித்த இடங்களில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதாவது ஓம் நமச்சிவாய என்று எழுதிய பேப்பர், திருப்பதி காசிக்கு சென்ற போட்டோ, பானிபூரி சாப்பிட்டது, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தது என மார்ச் மாதம் இப்படியே போயிட்டு என அதை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா? கோவில் கோவிலா போறாங்களே ஹார்ட்டிஸ்க் கிடச்சுட்டுதா? என தமது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement