• Jan 18 2025

பிக் பாஸ் வீணான ஒன்று.. உலக நாயகனே பணம் சம்பாதிக்க தான் போனாரு..! கிழித்து தொங்கவிட்ட ராபர்ட் மாஸ்டர்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் 'நெவர் எஸ்கேப்' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த திரைக்கதை திகிலூட்டும் பாணியில் உருவாகியுள்ள நிலையில், இதற்கான  பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த விழாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் உலகநாயகன் கமல்ஹசன் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் ராபர்ட் மாஸ்டர். இது தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் கூறுகையில்,


இந்த படத்தைப் பற்றி என்னிடம் கதை சொல்ல வந்தபோது நான் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் நான் மொட்டை அடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். நான் நடித்துக் கொண்டிருப்பதை பற்றி சொல்லி, அந்த படக்குழுவினரிடம் அனுமதி வாங்கி தான் இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில்  என்னை கலந்து கொள்ள கேட்டார்கள். நான் பிஸியாக இருந்ததால் அதில் கலந்து கொள்ளவில்லை. உள்ளே நடப்பது உண்மையா பொய்யா என பார்க்கத்தான் பிக் பாஸ் சென்றேன். அந்த அனுபவம் நன்றாக இருந்தது என்று கூறினார்.


மேலும், என்னை பொறுத்தவரை பிக் பாஸ் நிகழ்ச்சி வீணான ஒன்றுதான். நான் உள்ளே சென்றது பணம் சம்பாதிக்கத் தான். கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என்ற பெயர் உண்டு. அவரும் பணம் பார்க்க தான் உள்ளே சென்றார். கமலின் சம்பளம் எவ்வளவு என்று அனைவருக்குமே தெரியும். உள்ளே நடக்கும் பல காட்சிகளை  கட் பண்ணுகிறார்கள். நான் எல்லோரிடம் சண்டை போடாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி பண்ணலாம் என சொல்வேன். ஆனால் எதேர்ச்சியாக வந்து விடுகிறது. உள்ளே இருக்கும் வரை தான் சொந்தம் எல்லாம் வெளியே வந்தால் எதுவும் கிடையாது எனக் கூறியுள்ளார்.


இதேவேளை, பிக் பாஸ் சீசன் 6 இல் பங்கேற்ற ராபட் மாஸ்டர், அங்கு ரட்சிதாவிடம் நடந்து கொண்ட விதம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவர் 49வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement