• Apr 18 2026

பிக் பாஸில் மாயாவை பெருமைப்படுத்திய அர்ச்சனாவின் அம்மா..! நெகிழ்ச்சியான தருணம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 80 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில், அதில், அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா, விக்ரம் ஆகியோரது பெற்றோர் உள்ளே வருகை தந்துள்ளனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள அர்ச்சனாவின் அம்மா, மாயா பூர்ணிமாவின் நட்பு பற்றி பெருமையாக பேசுகிறார்.

அதன்படி, எல்லாரும் இருக்கும் போது, பூர்ணிமா அழுத நேரத்துல மாயா அப்படியே, கால்ல செருப்பும் இல்லாம ஓடி வந்தாங்க, அது உண்மையாவே சூப்பரா இருந்துச்சு, என் பொண்ணுக்கு அப்படியொரு நண்பி இல்லையே என கவலையாவும் இருந்துச்சு என அர்ச்சனாவின் அம்மா சொல்லியுள்ளார்.


தற்போது குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement