• Feb 23 2025

இந்திய இசைக்குழுவிற்கு கிராமி விருது.. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!



 இந்திய இசை குழுவிற்கு சர்வதேச அளவில் உயரிய இசைத்துறை விருதான கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதை  அடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  உள்பட இசைத்துறையை சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் இசைத்துறைக்கு கிடைக்கும் மிக உயரிய விருது கிராமி விருது. ஒவ்வொரு இசையமைப்பாளரும், பாடகரும் இந்த விருதை வாங்க வேண்டும் என்ற கனவில் இருப்பார்கள்.

இந்த நிலையில்  தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், ஜாகிர் உசேன்,  விநாயக் ராம் கணேஷ் மற்றும் ராஜகோபாலன் ஆகியோர் அடங்கிய இசை குழுவினர் உருவாக்கிய சக்தி என்ற ஆல்பத்திற்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 8 பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பத்திற்கு கிராமி விருது அறிவிக்கப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து இசைத்துறையை சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

குறிப்பாக இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  தனது சமூக வலைத்தளத்தில்  ஜாகிர் உசேன், சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement