• Jan 19 2025

மீனாவுக்கு கிடைத்த பாராட்டு.. மொத்தமா பல்பு வாங்கிய விஜயா! வலியால் கதறிய மனோஜ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவை சமாதானம் பண்ணுவதற்காக சிக்கன் குழம்பு டேஸ்டாக வைக்கின்றார் மீனா. இதனால் வீட்டு வாசலுக்கு வரும்போது ஸ்ருதிக்கு குழம்பு வாசனையை அடிக்க அவர் வந்து மீனாவை புகழ்ந்து தள்ளுகின்றார். ஆனாலும் விஜயா மீனாவை தர குறைவாக பேச, ஸ்ருதி விஜயாவுக்கு பதிலடி கொடுக்கின்றார். 

அந்த நேரத்தில் மனோஜ் ரோகினையும் வந்து, மனோஜ் நீங்க வச்ச குழம்பு தெரு வர வீசுது என்று விஜயாவை பாராட்ட ஸ்ருதி  சிரித்துக்கொண்டே ஆன்டி எந்த காலத்தில் சமைத்து இருக்கின்றார் என கிண்டல் அடிக்கின்றார். அதன் பின்பு எல்லோரும் மீனாவை பாராட்டி சாப்பிட்டு முடிக்கின்றார்கள். ஆனால் விஜயா குறை சொல்லிக் கொண்டிருக்க, ஸ்ருதி அவரை ஹாஸ்பிடலில் கொண்டு போய் செக் பண்ணுமாறு சொல்லுகின்றார். 

இதே தொடர்ந்து முத்து வீட்டுக்கு வந்து மீனாவின் கையில் அல்வா கொடுக்கின்றார். மேலும் உன் மேல எந்த தப்பும் இல்லை. சத்யா தப்பான வழியில போயிருவான் என்ற கோபம் தான், அவனுக்கு சேர்க்க சரியில்லை அவனுடைய வாழ்க்கை நாசமா போய்விடும் என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்ததாக மீனாவிடம் ஆறுதலாக கதைக்கின்றார்.


அதன் பின்பு ரவி அண்ணி இன்றைக்கு டேஸ்ட்டா சிக்கன் குழம்பு வச்சாங்க.. நாங்க மொத்தமா காலி பண்ணிட்டோம் என சொல்ல, என்னடா சொல்றீங்க என முத்து அதிர்ச்சி அடைகின்றார். ஆனால் மீனா முத்துவுக்கு கொஞ்சம் கறி எடுத்து வைத்ததாக கொண்டு வந்து பரிமாற முத்து சுவைத்து சுவைத்து சாப்பிடுகின்றார். 

இதை பார்த்து விஜயா வயிறு எரிச்சலுடன் நிற்க, மீனா விஜயாவுக்கு அல்வா கொடுக்கின்றார். ஆனாலும் விஜயா கோவத்தில் சென்று விடுகின்றார்.. அதன் பின்பு மனோஜ் கட்டிலில் காலை தெரியாமல் இடித்துக் கொள்கின்றார். இதனால் வலியால் துடிக்க விஜயா, அங்கு வந்த விஜயா இந்த கட்டிலை சீக்கிரம் எடுக்குமாறு பேசுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement