• Jul 05 2025

மீண்டும் களமிறங்கிய அனுஷ்கா..! படம் இத்தனை கோடி விற்பனையா..?

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக பிரபலமான அனுஷ்கா இவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர். பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.


உடல் எடை சற்று அதிகமாகியமையினால் சமீப வருடங்களில் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது ‘காட்டி’ என்ற புதிய ஆக்ஷன் படத்தின் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார். இயக்குநர் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


'காட்டி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை அனுஷ்காவை காணாத வித்தியாசமான லுக் மற்றும் வேடத்தில் அவரை பார்க்க முடிந்துள்ளது. ரசிகர்கள் "இது போன்ற வேடத்தில் அனுஷ்காவை இதுவரை பார்த்ததே இல்லையே!" என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ’காட்டி’ படத்தின் OTT உரிமை ரூ.36 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு சினிமாவில் ஒரு சோலோ ஹீரோயின் படத்திற்கு இதுவரை இந்த விலை விற்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement