• Jan 19 2025

பப்ளிமாஸ் மாதிரி இருந்த அனுஷ்கா ஷெட்டி, திடீரென இஞ்சி இடுப்பழகியாக மாறியது எப்படி?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை அனுஷ்கா ஷெட்டி கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை அதிகரித்து சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென ஸ்லிம்மாகி இஞ்சி இடுப்பழகி ஆக மாறி உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

நடிகை அனுஷ்கா ஷெட்டி திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு தான் அவர்சூப்பர்என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இதே மார்ச் 12ஆம் தேதி முதல் முறையாக  கலந்து கொண்டார் என்பதும் இன்றுடன் அவர் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி, சுந்தர் சி இயக்கத்தில் உருவானரெண்டுஎன்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அதன் பின்னர் மீண்டும் தெலுங்கில் நடித்தார். இந்த நிலையில் தான்அருந்ததிதிரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது




 இந்த படம் தெலுங்கில் வெளியானாலும் தமிழில் டப்பிங் செய்து வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து தமிழில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்யுடன்வேட்டைக்காரன்சூர்யாவுடன்சிங்கம்சிம்புவுடன்வானம்கார்த்தியுடன்சகுனி’ ’அலெக்ஸ் பாண்டியன்மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் உருவானஇரண்டாம் உலகம்உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் அவர் ஆர்யாவுடன்இஞ்சி இடுப்பழகிஎன்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படத்தின் கதைக்காக அவர் உடல் எடையை கூட்டினார்.

அதன்பின் அவர் ஒரு யோகா டீச்சராக இருந்த போதிலும் கூட்டிய எடையை குறைக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார் என்பதும்பாகுபலிபடத்தில் நடிக்கும் போது கூட அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென அவர் 6 மாதத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியுள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இன்று அவர் ஒரு மலையாள திரைப்படத்தின் பூஜையில் கலந்து கொண்ட நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர்அருந்ததிபடத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் ஸ்லிம்மாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement