• Jan 19 2025

நள்ளிரவில் அஞ்சலி போட்ட ட்வீட்.. பற்றி எரியும் பாலையா தள்ளிவிட்ட விவகாரம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு நடிகர் பாலையா, அஞ்சலி நடித்த ’கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற திரைப்படத்தின் ப்ரமோஷன் விழாவிற்கு வருகை தந்த போது அவர் மேடையில் அஞ்சலியை தள்ளிவிட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை அஞ்சலி சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மேடையில் அவர் பாலையாவுடன் சிரித்து கொண்டிருந்தாலும் பெண்ணியவாதிகள் இதற்கு திடீரென பொங்கி எழுந்தனர்.

ஒரு பெண்ணை எப்படி மேடையில் தள்ளிவிடலாம் என்றும், பெண்ணுக்கு மதிப்பு அளிக்க வேண்டாமா என்றும் அவர்கள் கூறிய நிலையில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள், பாலையா குடி போதையில் இருந்ததாகவும் அவர் உட்கார்ந்து இருந்த நாற்காலி அருகே மது பாட்டில் இருந்ததாகவும் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென நேற்று நள்ளிரவில் நடிகை அஞ்சலி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர் பாலையாவுக்கு எதிராக பொங்கி எழுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ’பாலையாவும் நானும் பல ஆண்டுகள் நண்பர்கள் என்றும், ஒருவரை ஒருவர் மரியாதை கொடுத்து வருகிறோம் என்றும், என் படத்தின் ப்ரமோஷன் விழாவுக்கு அவர் வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் என்றும், அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டதற்கு நான் பெருமைப்படுகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

ஒரு பக்கம் பெண்ணியவாதிகளும் நெட்டிசன்களும் பொங்கி எழுந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நடிகை அஞ்சலி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்வீட் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Advertisement

Advertisement