• Sep 20 2024

அனிருத்-சூர்யாவை புகழ்ந்து தள்ளிய கேஜிஎப் இயக்குநர்-இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா கவனிக்கப்படும் ஒரு இயக்குநராக மாறிவிட்டார். மாநகரம், கைதி, மாஸ்டர், இப்போது விக்ரம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கி வருகிறார்.

மேலும் இந்த 4 படங்களும் எப்போதும் போல இரண்டு சண்டை, காதல், நடனம் என இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டும் இயக்கி வருகின்றார்.

இப்போது அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்த 3ஆம் திகதி ரிலீஸ் ஆகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சினிமா வட்டாரங்களில் விக்ரம் பட வசூலை கண்டு ஆச்சரியத்தில் உள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் வியந்து பேசி வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விக்ரம் பற்றி பேசி இருந்தது வைரல் ஆனது.

இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் ட்விட்டரில் விக்ரம் பற்றி வியந்து பேசி இருக்கிறார்.

"விக்ரம் படத்தின் மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள். கமல் சார், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோரை ஒன்றாக திரையில் பார்ப்பது விருந்து. உங்கள் படங்களுக்கு நான் big admirer. "

"அனிருத் நீங்க ஒரு சூப்பர்ஸ்டார். அன்பறிவு மாஸ்டர்கள் பார்த்து இன்னும் பெருமையாக இருக்கிறது" என பிரஷாந்த் நீல் குறிப்பிட்டு இருக்கிறார்.

"ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு அதில் இருந்து வெளியில் வர முடியவில்லை" என அவர் மற்றொரு ட்விட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement