• May 12 2024

புதுப்படத்துக்காக கெட்டப் மாற்றிய சிவகார்த்திகேயன்-அட இவரா அவர்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்து பட்டையை கிளப்பினார்.

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதற்கு பிற்கு பல படங்கள் ஹிட் கொடுத்த இவர் நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்யார் சிவகார்த்திகேயன்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த இவர் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது.

இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் படத்துக்கான ப்ரோமோ வீடியோ சில வாரங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விக்ரம் பாணியில் ஒரு ப்ரோமோவோடு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அத்தோடு கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்துக்காக சிவகார்த்திகேயன் புதிய தோற்றத்துக்கு மாறியுள்ளார். அத்தோடு அதிகமாக முடிவளர்த்து ரெமோ படத்தில் காணப்பட்டது போன்ற இளமையான தோற்றத்துக்கு அவர் மாறியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement

Advertisement