• Jan 19 2025

ரட்சிதா தினேஷை விட்டுப்பிரிய முக்கிய காரணமே கடன் பிரச்சனை தான்..! நண்பர்கள் அதிர்ச்சி தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரச்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். ஆனால் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் தினேஷ்.


இந்த நிலையில், ரட்சிதா மகாலட்சுமி தனது கணவர் தினேஷைப் பிரிய முக்கிய காரணமே கடன் சுமை தான் என்று அவரது நட்பு வட்டாரங்கள் தகவல்  தெரிவித்துள்ளனர். அதன்படி மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

ரட்சிதா மற்றும் தினேஷ் இருவருமே ஒருத்தர் மேல் ஒருத்தர் அளவிற்கு அதிகமாக அன்பு வச்சு இருக்காங்க. ரட்சிதா சீரியலில் நடிப்பதில் பிஸியாக இருந்தார். ஆனால், தினேஷூக்கு வாய்ப்பு குறைந்தவிட்டதால், இயக்குநராக திட்டம் போடடார். இது ரட்சிதாவிற்கு பிடிக்கவில்லை. 


இதை தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினேஷ் தயாரித்த நாச்சியாபுரம் சீரியலில் இருவரும் நடித்தனர். எனினும், அந்த சீரியல் பாதியில் தடிப்பட்டதால், தினேஷ் கடனில் சிக்கிவிட்டார். 

இவ்வாறு, தினேஷ்க்கு கடன் கொடுத்தவர்கள் எல்லாம் அவர் மீது வழக்கு பதிந்தார்கள். அத்துடன் அவருடைய வழக்கில் ரட்சிதாவின் பெரையும் சேர்த்து விட்டார்கள். இதுவே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம்' என நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 


Advertisement

Advertisement