• Jan 19 2025

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழா! ஜொலிக்கும் புகைப்பட தொகுப்பு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

உலகில் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், விரேன் மெர்ச்சன்ட் எனும் தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.

இந்த திருமணத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு ப்ரீ வெட்டிங் விழா குஜராத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.

அம்பானி வீட்டு  ப்ரீ வெட்டிங் விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அட்லீ போன்ற பாலிவுட், ஹாலிவுட் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், அமெரிக்காவின் பிரபல டாப் பாடகியான ரிஹானா இந்த திருமண நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி நடனம் ஆடுவதற்காக அமெரிக்காவில் இருந்து வந்து, பட்டையை கிளப்பி வருகிறார்.


குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் ப்ரீ வெட்டிங் விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,000 ஏக்கர் பரப்பளவில் காடுகள் சரிசெய்யப்பட்டு, 2,500 உணவு வகைகளுடன கோலாகலமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது அம்பானி வீட்டு ப்ரீ வெட்டிங் விழாவிற்கான ஏற்பாடுகள், மற்றும் அதில் பங்குபற்றிய பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்,



Advertisement

Advertisement