• Jan 19 2025

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத சாக்லேட் பாய்ஸ் யார் யார் தெரியுமா? டாப் 3 ஹீரோஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டங்களில் மாதவன், அரவிந்த் சாமி, அருண் விஜய் இவர்கள் தான் சாக்லேட் பாயாக வலம் வந்தார்கள். அவர்களுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் காணப்பட்டார்கள்.

1990ம் ஆண்டுகளில் வெளியான படங்களில் சிறப்பான நடிப்பையும், தோற்றத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் தான் அரவிந்த் சாமி.

இவர் நடிப்பில் வெளியான தளபதி, ரோஜா, பம்பாய், இந்திரா மற்றும் மின்சார கனவு என்று தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. 


அரவிந்த் சாமி பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தாலும் இன்றளவில் மட்டும் தனது திரையுலக வாழ்க்கையில் பெரிதாக எந்தவித கிசுகிசுவில் சிக்கியதே இல்லை.

இவரை தொடர்ந்து, அலைபாயுதே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட ஒரு நடிகர் தான் மாதவன். 


1990களின் இறுதியில் இருந்து பல ஆண்டுகள் சாக்லேட் பாய் என்ற பட்டத்தை தன்வசம் வைத்திருந்த ஒரு நடிகர் அவர். அவரும்,  புகழின் உச்சில் இருந்துவரும் போதும் கூட மாதவன் எந்தவித கிசுகிசுவிலும் சிக்கியதில்லை.

இவர்களை தொடர்ந்து நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜயும் தனது 29 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரையில் எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லை.


Advertisement

Advertisement