• Jan 19 2025

ஆனந்த் அம்பானி உடலில் இத்தனை சிக்கல்களா? யாரும் அறியாத மறுபக்கம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஒரு பக்கம் ஆனந்த் அம்பானியோட கல்யாணத்துக்காக அவருடைய அப்பா முகேஷ் அம்பானி கோடி கணக்கில் செலவு செய்த ஏற்பாடுகள் தான் உலகம் முழுக்க பேசுபொருளாக காணப்படுகின்றது.

இன்னொரு பக்கம் ஆனந்த் அம்பானியோட உடல் எடை பற்றி தான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

2016 வரைக்கும் பயங்கர குண்டா இருந்த ஆனந்த் அம்பானி, அதுக்கப்புறம் கடுமையான உடற்பயிற்சிகள் மூலமாக உடல் எடையை குறைத்த நிலையில், இப்ப மறுபடியும் அவர் ஏன் குண்டாயிட்டார் அப்படின்னு சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.


2016 வரைக்கும் கிட்டத்தட்ட 170 கிலோ வரைக்கும் எடை இருந்த ஆனந்த் அம்பானி, அதுக்கப்புறம் கடுமையான உடற்பயிற்சி மூலம் 70 கிலோ அளவில் எடையை குறைத்தார்.

மற்றவர்களை மாதிரி அறுவை சிகிச்சை செய்யாமல் 21 கிலோமீட்டர் வரை நடந்து, கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அப்படி என்று உடல் எடையை குறைத்து இருக்கிறார். அவருடைய ட்ரான்ஸ்ஃபர்மேஷன பார்த்து நிறைய பேர் அசந்து போய் இருந்தார்கள்.


அதற்கு பிறகு பல ஆண்டுகள் பொதுவெளியில் தென்படாது இருந்த ஆனந்த் அம்பானி, ராதிகா நிச்சயதார்த்தத்துக்கு அப்புறம் தான் வெளி உலகத்தில்  தென்பட ஆரம்பித்தார்.

இப்போது வரையில் பலரது கேள்வி, ஆனந்த் அம்பானி எதனால இப்படி குண்டாக இருக்கிறார் என்று. அதற்கான காரணத்தை விசாரித்த போது தான் ஆனந்த் அம்பானிக்கு ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறதும், அதுக்காக அவர் இன்ஹேலர் மருந்துகள் மட்டும் இல்லாம ஸ்டராய்டு மருந்துகளையும் எடுத்துட்டு இருக்கார் அப்படி என்ற விஷயமும் தெரிய வந்துள்ளது.


பொதுவா ஸ்டராய்டு மருந்துகள் மட்டும் இன்ஹேலர்கள்ல சோடியத்தோட அளவு அதிகமாக இருக்கும். அது அதிக அளவில் பசி உணர்வை தூண்டும்.

இதன் காரணமாக தான் அவருடைய உடல் எடை அதிகரித்து இருக்கணும்னு சொல்றாங்க. அது மட்டும் இல்லாமல் அவர் உடல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement