• Aug 17 2026

நடிகர் கிங்காங் வீட்டில் அதிகாலையில் பரபரப்பு.. யாருமே எதிர்பார்க்காத சம்பவம்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் கிங்காங் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா, தனது கணவர் நவீனுடன் இணைந்து முதல் குழந்தையை வரவேற்றுள்ளார். இன்று (15.06.2026) அதிகாலை சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கீர்த்தனாவுக்கு சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது.


இந்த இனிய செய்தியால் கிங்காங் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தனது வீட்டிற்கு மகாலக்ஷ்மி வந்துவிட்டார் என்ற மகிழ்ச்சியில், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தனது சந்தோஷத்தை பகிர்ந்து வருகிறார் கிங்காங். தாத்தாவாகியுள்ள மகிழ்ச்சியை அவர் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.

கீர்த்தனாவின் திருமணம் கடந்த ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள், திரைப்படத் துறையைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த திருமணம் அப்போது பெரும் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் கீர்த்தனாவின் வளைகாப்பு விழாவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கீர்த்தனா – நவீன் தம்பதியருக்கு ரசிகர்கள் மற்றும் நெருங்கியவர்கள் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சியான தருணம் கிங்காங் குடும்பத்திற்கு மறக்க முடியாத ஒரு சிறப்பான நாளாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement