• Jan 21 2025

மேடையில் அசிங்கப்பட்ட பயில்வான்... கடுப்பேத்தி உண்மையை உளறிய காமெடி நடிகர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் நடிகர், நடிகைகள் குறித்து பேசியே பிரபலமானவர். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளுவார்.

இவ்வாறு  சினிமாவில் நடித்து பத்திரிகையாளராக இருந்து வந்தவர், தற்போது யூட்யூப் தளத்தில் தான் பேசும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் அதிக வியூஸ் வேண்டும் என்பதற்காகவே சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி தொடர்ந்து பேசி வருகின்றார்.

ஆரம்பத்தில் இவருடைய பேச்சுக்கள் நம்பப்பட்டாலும் காலப்போக்கில் அவரது பேச்சில் அநாகரீகம் காணப்பட்டது. இதனால் பல நடிகைகள் நேரடியாகவே அவருடன் மோதி உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது காமெடி நடிகரான ஜெகன், பயில்வான் ரங்கநாதனை மேடையில் வைத்து கடுப்பேற்றி உள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.


அதாவது நகுல் நடிக்கும் பட விழாவில் கலந்து கொண்ட ஜெகன் கூறுகையில், மக்களுக்கு படிக்கிற பழக்கம் கிடையாது. ஆனால் யூட்யூப் பார்த்து அதிகம் தெரிந்து கொள்கிறார்கள் என கூற, அங்கிருந்த பயில்வான் ஜெகனுக்கு கையை கொடுக்கிறார்.

இதன்போது, அண்ணன் உங்க சேனலை பார்த்து நிறைய தெரிந்து கொள்ள முடியாது. அதில் தேவையில்லாத விடயங்களை தான் நிறைய தெரிந்து கொள்ள முடியும் என பயில்வானுக்கு நோஸ் கட் பண்ணியுள்ளார்.

Advertisement

Advertisement