• Sep 07 2024

பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தின் முதல் பாடலை வெளியிடும் விஜய்! பாடியது யார் தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் அந்தகன். இந்த படம் ரீமேக் படமாக இருந்தாலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன், பிரியா ஆனந்த், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தை பிரசாந்தின் தந்தை இயக்குனர் தியாகராஜன் இயக்கியுள்ளார். இதன் டெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில் தற்போது அந்தகன் படத்தின் முதல் பாடல் எதிர்வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியாக உள்ளது என்றும் அதனை நடிகர் விஜய் வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி  உள்ளன. இந்த பாடலை நடிகர் விஜய் சேதுபதி, அனிருத்  பாடியுள்ளனர்.

அந்தகன் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அத்துடன் அதே நாளில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படமும் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement