• Sep 08 2024

அட்ரா சக்க..!! விஜய்யை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கூட்டணியா? ஜனனிக்கு அடித்த அதிர்ஷ்டம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர் தான் நடிகை ஜனனி. இவர் அதிகமாக ஹோட்டல்களில் சாப்பாடுகளை ரிவ்யூ பண்ணி வீடியோக்களை வெளியிடுவார். இவருக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார். இது அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இளைய தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இது அவருக்கு முதலாவது படமாக காணப்பட்டது. இதன்போது நடிகை திரிஷா, விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். அதற்கு பின்பு இவர் லியோ ஜனனி என்றுதான் அழைக்கப்பட்டார்.


இந்த நிலையில், தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதி,  டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் Train படத்தில் தானும் ஒரு பங்கு வகிப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜனனி.

அதன்படி இந்த வாய்ப்பை தனக்கு தந்த டைரக்டர் மிஷ்கினுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். தற்பொழுது ஜனனிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement