• Jan 19 2025

பாஜகவின் சரிவுக்கு ஜவான் படம் தான் முக்கிய காரணம்? பிரபலம் கொடுத்த அதிர்ச்சி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளும் இன்றைக்கு காத்துக் கொண்டிருப்பது இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை அறிவதற்காக தான்.

இந்தியா முழுவதும் பரபரப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், வடமாகாணங்களில் மிகவும் பிரபலமான யூடியூப்பர் துருவ் ரத்னே தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் சாருக்கானை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ஜவான் படத்தின் பங்களிப்பை நாம் மறக்கக்கூடாது. ஷாரூக்கான் மற்றும் ஜவான் படக்குழுவிற்கு நன்றிகள். ஜவான் படத்தின் மூலம் அரசாங்கம் மற்றும்  மின்னணு வாக்கு இயந்திரங்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டியது இந்த திரைப்படம் தான். இது உண்மையிலேயே பாராட்டக் கூடியது.


மேலும், அரசாங்கத்திற்கு அடிபணியாமல் அரசாங்கத்தில் நடைபெறும் குளறுபடிகளை வெளிக்காட்டுகின்ற திரைப்படத்தை கொண்டு வந்து பலரின் மனதை சாருக்கான் திறந்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜவான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி மற்றும் அரசியல் கலந்த படமாக நல்ல வரவேற்பு பெற்றது. அது மட்டுமில்லாமல் வசூலிலும் ஆயிரம் கோடியை கடந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது நடக்கும் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றியை எட்டுவதற்கு ஜவான் திரைப்படம் தடையாக அமைந்துள்ளது என யூடியூப்பர் தேவ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement