• Sep 14 2026

ரஜினி சாருக்கு நான் போட்டியா? விஷப்பரீட்சையே வேண்டாம்.. ஞானவேல் ராஜா பகிர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இனி வரும் மாதங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதன் காரணத்தினால் ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் காணப்படுகின்றார்கள். சமீபத்தில் கோட் படத்தின் ட்டைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா  திரைப்படத்தின் டிரைலரும் சூர்யா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் பட்ஜெட் 350 கோடி என கூறப்படுகின்றது இதனை ஞானவேல் இயக்கியிருந்தார்..

அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன்  திரைப்படமும் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்படுகின்றது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது நேற்றைய தினம் இந்த படம் எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது

இவ்வாறு கங்குவா  திரைப்படமும் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் ஒரே நாளில் வெளியாக உள்ளது இது சற்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரஜினி சார் படம் வந்தால் நாங்க போட்டியாக எங்கப் படத்தை விட மாட்டோம். அது ஒரு விஷப்பரீட்சை என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் ரஜினி சார் படத்துடன் உணர்வு ரீதியாகவும் சரி தொழில் ரீதியாகவும் சரி நான் மோத மாட்டேன். என் பிறந்தநாளை கூட நான் கோயிலுக்கு சென்று கும்பிட்டதில்லை ஆனால் ரஜினி சார் பிறந்த நாளுக்கு ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் 108 சுத்து சுத்துவேன் என ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement