• Jan 18 2025

பாக்கியலட்சுமி சீரியலுக்கு விரைவில் சுபம்.. புதிய சீரியலுக்கு பிக் பாஸ் பிரபலத்தை களமிறங்கிய விஜய் டிவி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றாக திகழ்வது தான் பாக்கியலட்சுமி  சீரியல். இந்த சீரியல் கடந்த காலங்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வந்த போதிலும், இதன் கதை இரண்டு பொண்டாட்டி கதையாக மாறவே பின்னிலையை சந்தித்தது.

ஆனாலும் இந்த சீரியலின் குடும்பத் தலைவியாக இருக்கும் பாக்கியா, தனது குடும்பத்தின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கணவரின் பிரிவு, பிள்ளைகளின் வாழ்க்கை பிரச்சனை என்ற தொடர் இழப்புகளுக்கு மத்தியில் தனது கனவை நினைவாக்கி தொழிலதிபராக ரெஸ்டாரன்ட் ஒன்றையும் ஆரம்பித்து வெற்றி கண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகவும், அடுத்து அதற்கு பதிலாக விஜய் டிவியில் பனி விழும் மலர் வனம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



அதாவது தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கேள்விக் குறியாக காணப்பட்ட ஜெனியின் வாழ்க்கையும் செழியனின் வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. எழில் வாழ்க்கைக்கு ஏற்கனவே தீர்வு கண்டுவிட்டார் பாக்கியா. கோபியும் பாக்கியாவும்  பிரிந்திருந்தாலும் ராதிகாவுடன் இணைந்து ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகிறார் கோபி. இது தவிர ஏனைய  பிரச்சினைகள் எல்லாமே இந்த சீரியலில் முடிவுக்கு வந்ததாகவே காணப்படுகிறது.


இதை தொடர்ந்து விஜய் டிவியில் புத்தம் புது சீரியலாக பனி விழும் மலர் வனம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஈரமான ரோஜா சீரியலில் நடித்த சித்தார்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா அவருக்கு ஜோடியாக என்ட்ரி கொடுக்கின்றார்.

மேலும் தமிழும் சரஸ்வதி நாடகத்தில் வில்லனாக நடித்து வரும் அர்ஜுனும் இந்த சீரியலில் நடிக்க உள்ளார். அதேபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் முத்துப்பாண்டி கேரக்டரில் நடிக்கும் சத்யாவும் இதில் வில்லனாக நடிக்க  போகின்றார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement