• May 17 2026

விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? - மஞ்சு வாரியருக்கு அஜித் கொடுத்த ஸ்பெஷல் ட்ரைனிங்!

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகரும் ரேஸருமான அஜித் குமார் குறித்து நடிகை மஞ்சு வாரியர் பகிர்ந்த அனுபவம் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து லடாக்கில் 14 நாட்கள் பயணம் செய்த அனுபவத்தை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.


அவர் கூறுகையில், “அஜித்துடன் லடாக்கில் பயணம் செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அங்கு கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும், அது எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது.

குறிப்பாக, ஒரு விபத்து ஏற்பட்டால் நம்மை நாமே எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பதை அவர் முதலில் கற்றுக் கொடுத்தார்.” என்று தெரிவித்துள்ளார். இந்த அனுபவம் அவருக்கு வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

மேலும், “எனக்கு வண்டி ஓட்டத் தெரிந்திருந்தாலும், ஓட்டுநர் உரிமம் இல்லை. ஆனால் இந்த பயணத்திற்கு பிறகு அதன் அவசியத்தை உணர்ந்து உடனே ஓட்டுநர் உரிமம் எடுத்துவிட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement